விஜய் டிவியுடன் பிரச்சனை.. அடுத்தடுத்த வெளியேறிய பிரபலங்கள், ரசிகர்கள் அப்சட்
வெளியேறிய பிரபலங்கள்
சமீபத்தில் செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நான் விலகி கொள்கிறேன் என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து செஃப் தாமு தானும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து ஷாக்கிங் செய்திகள் வெளிவந்த நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சியை இயக்கி வந்த இயக்குனர் பார்திவ் குக் வித் சோமாளியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் குக் வித் கோமாளியை நடத்திய மீடியா மேசன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த Ravoofa அவர்களும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விழுகுவதாக கூறினார்.
விஜய் டிவியுடன் பிரச்சனையா
இதுமட்டுமின்றி மீடியா மேசன்ஸ் நிறுவனமும் விஜய் டிவியில் இருந்து விலகுகிறது என குறிப்பிட்டுள்ளார். குக் வித் கோமாளி, Mr And Mrs சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இந்த நிறுவனம் விஜய் டிவியில் நடத்தியுள்ளது. சில காரணங்கள் காரணமாக குக் வித் கோமாளி மற்றும் Mr And Mrs சின்னத்திரை அடுத்தடுத்த சீசன்களை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த நிலையில், விஜய் டிவிக்கும் - மீடியா மேசன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த அனைத்து விஷயங்களுக்கும் காரணம் என ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டு வருகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
