இசையமைப்பாளர் தேவா இறப்பதற்கு முன் நடந்தது என்ன?... வெளிவந்த தகவல்
இசையமைப்பாளர் தேவா
தமிழ் சினிமாவில் 80, 90களில் ரசிகர்கள் ரசித்த கலைஞர்கள் பலரின் இறப்பு செய்தி மக்களை மிகவும் வாட்டி வருகிறது.
அப்படி தான் இன்று தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தேனிசை தென்றல் தேவா அவர்கள் இன்று நம்முடன் இல்லை, அவரது இறப்பு செய்தி கேட்டு பிரபலங்களும் மிகுந்த ஷாக்கில் உள்ளனர்.
செய்தி வெளியானது முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தேவா அவர்களின் கடைசி நிமிடங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

என்ன ஆனது
தனது வீட்டில் கொஞ்சம் மூக்சு விடுவதில் சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார், அப்படியே உட்கார்ந்திருக்கிறார். அவர் நிலை சரியில்லை என ஆம்புலன்ஸ் வந்தால் தாமதமாகும் என அவரது மகன் காரிலேயே அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் இன்று காலை 9 மணிக்கு இசையமைப்பாளர் தேவாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதே அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதயத்துடிப்பை மீட்க சுமார் 45 நிமிடங்கள் CPR சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர் தேவாவுக்கு ஏற்கெனவே CABG எனப்படும் இதயத் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.