சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்
சிக்கந்தர்
முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் ராஷ்மிகா மந்தனா இவருக்கு ஜோடியாக நடிக்க சத்யராஜ், காஜல் அகர்வால், கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிந்தியில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதனால் படுதோல்வியை இப்படம் சந்தித்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸின் படமா இது என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. இப்படியொரு திரைப்படத்தை கண்டிப்பாக முருகதாஸ் பண்ணியிருக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தோல்விக்கு காரணம் இதுதான்
இந்த நிலையில், பிரபல மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இதில் "கோடிகளை போட்டு சல்மான் கான் சிக்கந்தர் படத்தை எடுத்தார். ஆனால், முருகதாஸுக்கு சுதந்திரமே கொடுக்கவில்லை. அவரை போட்டு டார்ச்சர் பண்ணி. இத எடு, அத எடு கதையே மாத்து என சொல்லி, நான் படப்பிடிப்பிற்கு வர மாட்டேன், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அப்படி இப்படி சொல்லி ஒரு நெருக்கடி கொடுத்து, அவர் என்னோமோ உப்புமாவை கிண்டி வைத்துவிட்டார். இதனால் படம் எவ்வளவு பெரிய நஷ்டம் " என பேசியுள்ளார்.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
