மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு அர்ஜுன் ஓகே சொல்ல இதுதான் காரணமா.. வெளிவந்த தகவல்
அர்ஜுன் மகள் திருமணம்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம்.
அர்ஜுனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் திருமணம் என சில தினங்களுக்கு தகவல் வெளிவந்தது.
ஆனால், இதுகுறித்து அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், இந்த திருமணம் குறித்து வெளிவரும் செய்திகள் உண்மை என கூறப்படுகிறது.
ஓகே சொல்ல இதுதான் காரணமா
இந்நிலையில், ஐஸ்வர்யா - உமாபதி திருமணத்திற்கு அர்ஜுன் ஓகே சொல்ல இதுவே காரணம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியின் போது அவருடைய நல்ல பழக்கங்களும், நடவடிக்கைகளும் அர்ஜுனுக்கு பிடித்துப்போய்விட்டதாம். இதனால் தான் ஐஸ்வர்யா - உமாபதி திருமணத்திற்கு அர்ஜுன் ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த சிவாஜி படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
