எனக்கு மாப்பிள்ளையே கிடைக்கல, இதுதான் காரணம்: திருமணம் ஆகாதது பற்றி புலம்பிய கங்கனா
தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து இருந்தவர் நடிகை கங்கனா. அவர் தற்போது ஹிந்தியில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அது மட்டுமின்றி அவர் அவ்வப்போது பேசும் விஷங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது Dhaakad என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் அவர் அதிகம் ஆக்ஷன் இருக்கும் இருக்கும் ஸ்பை ஏஜென்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.

ஏன் இன்னும் திருமணம் ஆகல?
இந்நிலையில் தற்போது கங்கனா அளித்த பேட்டியில் தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என தெரிவித்து இருக்கிறார்.
தன்னை பற்றி தவறான பல வதந்திகள் பரவுவதால் தான் தன்னை திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை என கூறி இருக்கிறார். நான் ஆண்களை தாக்குகிறேன், அதிகம் சண்டை போடுகிறேன் என சில வதந்திகள் வருவதால் தான் இப்படி தன் பெயர் கெட்டுவிட்டது என கூறி இருக்கிறார்.