ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு காரணமே இதுதான்- நடிகை த்ரிஷாவே கூறிய பதில்
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா.
1999ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரேஒரு காட்சியில் நடித்திருந்தார்.
சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்தில் முதன்முதலில் நாயகியாக நடிக்க அதன்பிறகு சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் டாப் நாயகியாக வலம் வந்தார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்க இப்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

காரணம் என்ன
40 வயதை கடந்த போதும் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா ஹிந்தி படத்தில் நடிக்காதது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர், 2010ம் ஆண்டு அக்ஷய் குமாருடன் இணைந்து கட்டா மீட்டா படத்தில் நடித்தேன்.
படம் எதிர்ப்பார்ப்புடன் வெளியாக அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, ஹிந்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனதால் அதுவே என் முதலும் கடைசி படமாக அமைந்துவிட்டது.
இதனால் நான் பாலிவுட்டில் இருந்து விலகிவிட்டேன் என கூறியுள்ளார்.

பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri