கூலி படத்தால் கடும் அப்செட், ஏமாற்றத்தில் நடிகை ரெபா மோனிகா ஜான்! இப்படி சொல்லிட்டாரே
பிகில் படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் ரெபா மோனிகா ஜான். அவர் ரஜினியின் கூலி படத்திலும் நடித்து இருந்தார்.
ஆனால் அந்த படத்தில் அவரது காட்சிகள் அதிகம் வரவில்லை. அது பற்றி தற்போது அப்செட்டில் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
அப்செட் + ஏமாற்றம்
"என்ன சொல்வது. நிஜமாகவே நான் upset ஆக இருக்கிறேன். ஏமாற்றம் தான் அடைந்தேன். இன்னும் என்னால் படத்தில் மிக அதிகமாக கொடுத்திருக்க முடியும். எனக்கு தெரியும்."
"ஆனால், சில விஷயங்கள் நாம் எதிர்பார்ப்பது போல நடப்பதில்லை. கூலி படத்திற்காக எனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி. அந்த அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் அது என் கையில் இல்லை".
"என்ன செய்கிறோம், படத்தில் என்ன வருகிறது போன்ற விஷயங்கள் எல்லாம் நம் கையில் இல்லை. ஆனால் படத்தில் பணியாற்றியதற்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால் தலைவர் (ரஜினி) உடன் பணியாற்றி இருப்பதால் தான்" என ரெபா மோனிகா தெரிவித்து இருக்கிறார்.
#RebaMonicaJohn #Coolie #Rajinikanth #LokeshKanagaraj pic.twitter.com/b0bHzhTSAk
— Shameena (@shameena_111) September 24, 2025