சமீபத்தில் திருமணம் செய்த தமிழ் சினிமா பிரபலங்கள்! ஸ்பெஷல் தொகுப்பு
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா லாக்டவுன் என்பதால் அதிகம் திருமணங்கள் நடைபெறவில்லை. அதனால் கடந்த வருடமும் இந்த வருடமும் அதிக பிரபலங்கள் திருமணம் செய்திருக்கின்றனர். அப்படி சமீபத்தில் திருமணம் செய்த பிரபலங்கள் பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு இதோ..
ஆதி - நிக்கி கல்ராணி
நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். ஆனால் அதை அவர்கள் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர்.
மரகத நாணயம் படத்தில் ஒன்றாக நடத்த அவர்கள் பழகி காதலில் விழுந்திருக்கிறார்கள். அவர்களே திருமணத்தை அறிவித்தபோது தான் அவர்கள் காதலே எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது.
கடந்த மே 18ம் தேதி அவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவர்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
ரெபா மோனிகா ஜான் - ஜோமன் ஜோசப்
பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் ரெபா மோனிகா ஜான். அவர் தனது நீண்டநாள் காதலர் ஜோமன் ஜோசப் என்பவரை 2022 ஜனவரி 9ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் திருமணம் மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள் அந்த நேரத்தில் இணையத்தில் படுவைரல் ஆனது உங்களுக்கு நினைவிருக்கும்.
சினேகன் - கன்னிகா ரவி
சினேகன் மற்றும் கன்னிகா ரவி - இவர்களும் தங்கள் காதலை பல வருடங்கள் மூடி வைத்து கடந்த வருடம் தான் அனைவர்க்கும் கூறினார்கள்.
கமல்ஹாசன் முன்னிலையில் அவர்கள் திருமணம் 29 July 2021 அன்று நடைபெற்றது.
நக்ஷத்திரா நாகேஷ் - ராகவ்
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகையான நக்ஷத்திரா அவரது பாய் பிரென்ட் ராகவ் என்பவரை பெற்றோர் ஒப்புதல் உடன் திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் திருமணம் 2021 டிசம்பர் 9ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற்றது. அதில் நதிச்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
கிட்டத்தட்ட 7 வருடங்களாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். சென்னை அருகில் மகபாலபுரத்தில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடைபெற இருக்கிறது.