பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ
பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர்.
TTF டாஸ்கில் பார்வதி-கம்ருதீன் பேசியதும், அசிங்கமாக நடந்து கொண்டது குறித்தும் தான் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஒருவரை கீழே தள்ளி, அவர் உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படுகிறார் அதைப்பார்த்து எப்படி நடிக்கிறார் என கூறியது எல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அந்த எபிசோட் வந்ததில் இருந்து பிக்பாஸ் அவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என மக்கள் புலம்பி வருகின்றனர்.

புரொமோ
இன்று வந்துள்ள அதிரடி புரொமோவில், பார்வதி மற்றும் கம்ருதீனை, விஜய் சேதுபதி கடுமையாக திட்டியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல இருவருக்கும் Red Card கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். அந்த அதிரடியான காட்சியின் புரொமோ இதோ,