பிக் பாஸ் ரவீனா.. சீரியல்களில் நடிக்க தடையா?
விஜய் டிவியின் மௌன ராகம் 2ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரவீனா தாஹா. அவர் ஜில்லா, ராட்சசன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.
சீரியல்களில் பிரபலம் ஆன பிறகு ரவீனா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
அதன் பின் சமீபத்தில் விஜய் டிவியின் சிந்து பைரவி என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த சீரியலில் ஒரே ஒரு ஹீரோயின் என சொல்லி ஒப்பந்தம் செய்துவிட்டு அதன் பிறகு இரண்டு ஹீரோயின் கதை என சொன்னதால் தான் அவர் விலகிவிட்டார் என ஒரு தகவல் பரவியது. ஆனால் அது பற்றி அவர் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ரவீனா திடீரென சீரியலில் இருந்து விலகியதால் தயாரிப்பு நிறுவனம் சங்கத்தில் புகார் கொடுத்ததாம். அதனால் ரவீனா இனி சீரியல்களில் நடிக்க கூடாது என ரெட் கார்டு போடப்பட்டதாகவும் தகவல் பரவியது.
ரவீனா விளக்கம்
இது பற்றி ரவீனா தற்போது ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார். புகார் கொடுக்கப்பட்டது உண்மை தான், ஆனால் பேசி பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது.
சீரியல்களில் நான் நடிக்க தடை எதுவும் இல்லை என கூறி இருக்கிறார்.
You May Like This Video

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
