சீரியல் நடிகை ரவீனாவிற்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு?.. இனி நடிக்கவே முடியாதா, வெளிவந்த விவரம்
நடிகை ரவீனா
சீரியல் நடிகைகள் தான் இப்போது ரசிகர்கள் மனதில் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள்.
அவர்கள் பற்றி நல்ல செய்தியோ, தவறான செய்தியோ எதுவாக இருந்தாலும் வைரலாகி விடும். அப்படி சமீபத்தில் பிரபல சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரவீனா நடிப்பிற்கு ரெட் கார்ட்டு போடப்பட்டதாக தகவல் வந்தது.
முழு விவரம்
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிந்து பைரவி தொடரில் புரொமோ ஷுட் எல்லாம் நடித்தவர் திடீரென விலகினார்.
காரணம் முக்கிய நாயகி என கூறிவிட்டு பின் 2ம் நாயகியாக அவரது கதாபாத்திரத்தை கூறியதால் விலகியதாக ரவீனா தரப்பில் கூறப்பட்டது.
ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சி நடிகர் சங்கத்திடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமல் தடை போட்டுள்ளார்கள்.
பின் இரு சங்கமும் பேசி, ரவீனா சொன்ன காரணம் சரியாக இல்லாததால் அவருக்கு ஒரு வருஷம் தடை போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.