டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து முக்கிய நடிகரின் படத்திலும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி..
கோலமாவு கோகிலா படத்தில் டோனி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி, பெரியளவில் பேசப்பட்டவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
தனது வித்தியாசமான நடிப்பினாலும், டைலாக்கினாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி, கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து A1 படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்திலும் நடித்திருந்தார் ரெடின் கிங்ஸ்லி.
பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் படம் முழுக்க அட்டகாசம் செய்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி, தற்போது மற்றுமொரு முக்கிய நடிகரின் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆம், சிம்புவின் பத்து தல படத்திலும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.