ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்த நடிகை சங்கீதாவிற்கு இது இரண்டாவது திருமணமா?- மகளும் உள்ளாரா, விவரம் இதோ
சங்கீதா
நடிகை சங்கீதா சின்னத்திரையில் இப்போது பிஸியாக நடித்துவரும் பிரபலம்.
45 வயதாகும் சங்கீதா மராத்திய மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் 'தேனிசைத் தென்றல்' தேவா பாடியுள்ள புதிய அசத்தல் ஆல்பம்
அதன்பின் ஹிந்தி படங்களில் நடித்தவர் பின் தமிழில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவருக்கும் பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் கடந்த டிசம்பர் 10ம் தேதி மைசூரில் திருமணம் நடந்தது.
முதல் திருமணம்
இந்த நிலையில் நடிகை சங்கீதா குறித்து இதுவரை வெளிவராத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சங்கீதாவிற்கு கடந்த 2009ம் ஆண்டு கிரிஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது, சந்தோஷமாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
