அஜித் இப்படிப்பட்ட ஒருவர் தான்.. பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஓபன் டாக்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதன்பின், மீண்டும் அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்தார்.

AK 64 படத்தை இயக்கப்போவது ஆதிக் என தெரியவந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இது ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்துள்ளது. மேலும், தற்போது கார் ரேஸில் 2027ஆம் ஆண்டு ஜனவரி வரை அஜித் பிஸியாக இருக்கப்போகிறார் என கூறப்படும் நிலையில், அப்போது படம் நடிக்க மாட்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ரெஜினா ஓபன் டாக்
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவர் இப்படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியிருந்தார். இந்த நிலையில், நடிகர் அஜித் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.

"அஜித் சார் அவருடன் பணியாற்றும் கலைஞர்களை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் நடந்துகொள்வார், பெண்களை மரியாதையுடன் நடத்துவார். அவருடன் இணைந்து நடிப்பது என்பது அருமையான தருணம். ஈகோ எதுவும் பார்க்காமல் அவராக வந்து உங்களிடம் பேசுவார்" என கூறியுள்ளார்.
