பாலிவுட்டில் மிக மோசமாக நடத்தினார்கள்.. நடிகை ரெஜினா அதிர்ச்சி புகார்
நடிகை ரெஜினா கசன்ரா தற்போது தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலுல் பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை என்பதால் ஹிந்தி சினிமாவில் தன்னை மோசமாக நடத்தினார்கள் என ரெஜினா தற்போது பேட்டியில் கூறி இருக்கிறார்.

மோசமாக நடத்தினார்கள்
பல பேர் என்னை மோசமாக நடத்தினார்கள். வார்த்தைகளில் மட்டும் அல்ல, செயல்களிலும் தான். என்னை அப்படி மோசமாக பார்த்தார்கள். என் இடத்தில் யார் இருந்தாலும் அது தெரிந்திருக்கும். எனக்கு அது நன்றாக தெரிந்தது.
நான் தென்னிந்திய நடிகை என்றாலும், மற்ற நடிகைகளை விட நான் நன்றாகவே ஹிந்தி பேசுவேன். ஹிந்தியில் படிக்க, எழுத, பேச தெரியும். என் சொந்த குரலில் தான் டப்பிங் பேசுகிறேன். எனக்கு கொடுத்த ரோலில் கச்சிதமாக நடிக்க வேண்டும் என பார்த்து பார்த்து நடிக்கிறேன். ஆனாலும் இப்படி செய்கிறார்கள் என கோபமாக ரெஜினா கூறி இருக்கிறார்.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri