விரைவில் நடிகை ரெஜினாவிற்கு திருமணம், மாப்பிள்ளை யார்?- வைரலாகும் தகவல்
நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா, தமிழில் சில படங்களே நடித்து மக்களிடம் பிரபம் ஆனவர்.
கடந்த 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் முதலில் நடித்துள்ளார்.
அதன்பின் அழகிய அசுரா படத்தில் நாயகியாக அறிமுகமானவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடிக்க பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
இப்படத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின் தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்திவரும் ரெஜினா தமிழில் நீண்ட இடைவேளைக்கு பின் கருங்காப்பியம், காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
அஜித் நடிப்பில் தயாராகும் விடாமுயற்சி, பார்டர் மற்றும் ஃப்ளாஷ்பேக் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்
33 வயதாகும் நடிகை ரெஜினாவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அவரது தரப்பில் எந்தஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
