அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவிருந்த நடிகை ரெஜினா.. கையைவிட்டு போன திரைப்படம்

Report

Regina, Sivakarthikeyan Casted in Atlee Movie: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரெஜினா இணைந்து நடிக்கவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை ரெஜினா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இதில், அது என்ன படம்? என்பதை பற்றி அவர் கூறியிருக்கிறார். அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

நடிகை ரெஜினா

வலுவான கதைகளை அல்லது கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், ரெஜினாவின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒரு அம்மனை எதிர்க்கும் தீய சக்தி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை தனது நடிப்பால் மிரட்டியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவிருந்த நடிகை ரெஜினா.. கையைவிட்டு போன திரைப்படம் | Regina Sivakarthikeyan Casted In Atlee Movie

சமீபத்திய பேட்டி

மூக்குத்தி அம்மன் 2 Promotion நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் Chai வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகை ரெஜினா கலந்துகொண்டார். அப்போது இயக்குநர் பாண்டியராஜுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததை பற்றியும் பேசினார். அப்போதுதான் சிவகார்த்திகேயனுடன் அதற்கு முன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருந்ததாக கூறினார்.

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவிருந்த நடிகை ரெஜினா.. கையைவிட்டு போன திரைப்படம் | Regina Sivakarthikeyan Casted In Atlee Movie

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரெஜினா

இன்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் இயக்குநர்களில் ஒருவராக அட்லீ இருக்கிறார். இவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் 'ராஜா ராணி'. இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. ஆனால், இப்படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன், ரெஜினா, ஜெய் மற்றும் பிரியா ஆனந்த். இதில் நஸ்ரியா நடித்த கதாபாத்திரத்தில்தான் நடிகை ரெஜினா நடிக்கவிருந்துள்ளார். அட்லீ, நடிகை ரெஜினாவிடம் இப்படத்தின் கதையை கூட கூறினாராம். அனைத்தும் ஓகே செய்யப்பட்டு படம் தொடங்கவிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை என ரெஜினா அந்த பேட்டியில் கூறினார்.

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவிருந்த நடிகை ரெஜினா.. கையைவிட்டு போன திரைப்படம் | Regina Sivakarthikeyan Casted In Atlee Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US