20 வருடங்கள் பிறகு கதாநாயகியாக களம் இறங்கும் ரேகா!! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
மீண்டும் கதாநாயகியாகும் ரேகா
நடிகை ரேகா அறிமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்கத்தில் உருவாக உள்ள "மிரியம்மா" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார்.
இதில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தொலில்நுட்ப கலைஞர்கள்
ஜேசன் வில்லியம்ஸ் அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரெஹைனா இசையமைக்கிறார்.
பெண்களை மையமாக வைத்து தயாராகும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தை 72 பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மாலதி நாராயணன் தயாரிக்கிறார். இதில் படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, "யாத்திசை" ரஞ்சித், படத்தின் கலை இயக்கப் பணிகளை மேற்கொள்கிறார்.

நடிகை ரேகா திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri