கே.ஜி.எஃப் 2 அந்த காட்சிய நீக்குங்க! கடும் எதிர்ப்பு! சர்ச்சையில் ஹீரோ! 145 மில்லியன் வீயூஸ் வீடியோவுக்கு வந்த சோதனை!
கே.ஜி.எஃப் 2 படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி நடிகர் சஞ்சத் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
ஹீரோ யஷ் மிரட்டலான வேடத்தில் படம் 5 மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் ரூ 250 கோடி வசூல் செய்தது.
அண்மையில் யஷ் தன் பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு படக்குழு கேஜிஎஃப் 2 படத்தின் டீசரை வெளியிட்டது.
145 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் சாதனை படைத்துள்ள இந்த டீசரில் யஷ் புகைப்பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கர்நாடகா மாநிலம் புகையிலை தடுப்புப் பிரிவு படக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதில் சிகரெட் புகைப்பதைக் காட்டும் காட்சிகள் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 5 -ஐ மீறியுள்ளது எனவும் எனவே COTPA 2003 படி ஆன்லைன் தளங்களில் இருந்து டீசரை நீக்கவும், புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் படத்தின் சுவரொட்டிகளை அகற்றவும் புகையிலை தடுப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.