விஜய் டிவியின் கண்மணி அன்புடன் சீரியலில் மாற்றப்பட்ட நடிகை... யார் தெரியுமா?
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சின்ன மருமகள் என பல தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவிக்கு பிறகு டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் விஜய் டிவி தொடர்கள் தான் அதிகம் வருகின்றன.
எல்லா தொடர்களுமே இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்து என்ன ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே ரசிகர்கள் சீரியல்களை அதிகம் கவனித்து வருகிறார்கள்.
தர்ஷனை அடித்த ஈஸ்வரி, ஜனனிக்கு வந்த ஷாக்கிங் போன் கால், ராணா செய்தது என்ன?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
மாற்றம்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் மதிய வேலையில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் கண்மணி அன்புடன். இந்த தொடரில் முக்கிய ஜோடியாக பார்க்கப்படும் அன்பு-கண்மணி வாழ்க்கையில் இப்போது பிரச்சனையாக நடந்து கொண்டிருக்கிறது.

அன்புவின் அம்மாவும் இப்போது தனது மகனுக்காக வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்க சீரியலில் ஒரு நடிகையின் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதாவது கதையில் ராஜேஸ்வரியாக சாந்தி வில்லியம்ஸ் நடித்து வந்தார், அவர் தொடரில் இருந்து வெளியேற இப்போது அந்த கதாபாத்திரத்தில் லலிதா நடித்து வருகிறார்.