சன் டிவி மலர் சீரியலில் அக்னிக்கு பதிலாக நடிக்கப்போகும் நடிகர் இவர்தானா?- போட்டோ இதோ
சன் டிவி
சீரியல்கள் இப்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களை தாண்டி வேலைக்கு செல்பவர்களும் பயண நேரத்தில் சீரியல்களை தான் அதிகம் பார்க்கிறார்கள்.
நாமும் வெளியே பயணம் செய்யும்போது சீரியல்கள் பார்ப்பவர்களை பார்க்கலாம். இப்படி அனைவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சீரியல்களை வெற்றிகரமாக பல ஆண்டுகளாக ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.
தற்போது சன் சீரியல்களின் நாயகன் தொடரை விட்டு வெளியேறிய தகவல் தான் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.
புதிய நடிகர்
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் மலர் தொடர் முக்கியமானது. இந்த தொடரில் நாயகனாக நடித்து வந்தவர் அக்னி, இவருக்கு அண்மையில் காயம் ஏற்பட தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சுரேந்தர் என்பவர் மலர் தொடரில் அர்ஜுனனாக நடிக்க இருக்கிறாராம்.