ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி படம்.. வசூல் வேட்டையில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.
தளபதி ரீ ரிலீஸ்
சமீபகாலமாக மெகாஹிட்டான திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வது என்பது வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி வசூலில் பட்டையைக் கிளப்பியது.
இந்த நிலையில், இன்று ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் என்பதனால், அவருடைய கல்டு க்ளாஸிக் திரைப்படம் என அனைவராலும் கொண்டாடப்படும், தளபதி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
வசூல்
இயக்குநர் மணி ரத்னம் - ரஜினிகாந்த் - மம்மூட்டி - இளையராஜா கூட்டணியில் உருவான இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தளபதி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறது. ஆம், ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தளபதி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது.
You May Like This Video