புதுமண தம்பதிகளான ரேஷ்மா மற்றும் மதனிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு ! என்ன செய்துள்ளார் பாருங்க..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகரைகளாக விளங்குபவர்கள் தான் ரேஷ்மா மற்றும் மதன், இவர்கள் இருவரும் அபி டைலர் என்ற சீரியலில் ஜோடிகளாக நடித்து வந்தனர்.
மேலும் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது, அவர்களின் திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ கால் மூலம் அழைப்பு விடுத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் சிம்புவின் ரசிகர்களும் அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே போச்சுடவா தொடரில் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்து இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர். அதன்பின்னும் அபி டைலர் என்ற தொடரில் ஒன்றாக நடித்து வந்த இவர்கள் கடந்த 15 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.