ரேஷ்மாவை மூன்றாம் திருமணம் செய்ய சொன்ன முன்னாள் கணவர்.. இதோ வீடியோ
ரேஷ்மா பசுபுலேட்டி
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்" படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் "ரேஷ்மா பசுபுலேட்டி". இப்படத்தில் இவர் நடித்திருந்த புஷ்பா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
ரேஷ்மா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சின்னதிரை சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார்.
மூன்றாம் திருமணமா?
சமீபத்தில் ரேஷ்மா தன் மகனுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது ரேஷ்மாவின் இரண்டாவது (முன்னாள்) கணவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ரேஷ்மா எப்போதும் பெரிய திரையில் வர தான் ஆசைப்பட்டார். தற்போது அது நடந்துள்ளதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது".
"நல்ல குணங்கள் உள்ளவரை பார்த்து திருமணம் செய்து கொண்டு அவருடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்" என்று ரேஷ்மாவிடம் கூறியுள்ளார். இதோ அந்த முழு வீடியோ.
டாடா படத்திற்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய கவின்.. எவ்ளோ தெரியுமா?

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
