பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை ரேஷ்மா?... காரணம் இதுதானா?
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.
பாக்கியலட்சுமி, ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் இப்போது பழிவாங்கும் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியாவை பழிவாங்க கெட்டுப்போன சிக்கனை சேர்த்து அவருக்கு கஷ்டத்தை கொடுக்க நினைத்த கோபியின் பிளானை அவர் தெரிந்துகொண்டார்.
உண்மை தெரிந்த வேகத்தில் கோபி வீட்டிற்கு சென்று சரவெடி கேள்வி கேட்ட பாக்கியா அப்படியே போலீஸிலும் புகார் அளித்துள்ளார்.
பிரபல நடிகை
இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
விஷ்ணு நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாலும் சரியான பட வாய்ப்பு வரவில்லை, ஆனால் சீரியல்களில் தொடர்ந்து நடிக்கிறார்.

சீதா ராமம், அபி டெய்லர், பாக்கியலட்சுமி என நடித்து வருபவர் இப்போது கார்த்திகை தீபம் புது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திடீரென ரேஷ்மா, ராதிகா கதாபாத்திரத்தை பெருமையாக கூறி அந்த கதாபாத்திர புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் திடீரென அவர் ஏன் ராதிகா போட்டோஸ் போடுகிறார், புதிய சீரியல் வாய்ப்பால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுகிறாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri