ஏமாற்றப்பட்ட பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி மேனன்- அவரே கூறிய மோசடி
பாபி சிம்ஹா சில படங்களே நடித்து தேசிய விருது எல்லாம் வாங்கியவர். இவரது நடிப்பில் ரசிகர்கள் நிறைய படங்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
அவரோ படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அவ்வப்போது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்வார். இப்போது ஒரு முக்கியமான விஷயம் குறித்து ஷேர் செய்துள்ளார்.
அதாவது அவர் எப்போது சின்ன தொழில் செய்வோருக்கு உதவி புரியும் வகையில் அவர்களின் பொருள்களை வாங்குவாராம். அப்படி இன்ஸ்டா பக்கத்தில் ஒருவரின் பொருளை வாங்க பணம் எல்லாம் கட்டியுள்ளார்.
பணம் கட்டி 2 மாதங்கள் ஆகிறதாம் ஆனால் இன்னும் பொருள் வரவில்லையாம். இனிமேல் யாரும் இந்த பக்கத்தை நம்பி பணம் அனுப்பாதீர்கள் என மற்றவர்களை உஷார் செய்துள்ளார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    