Resident Evil திரை விமர்சனம்

Report

ஹாலிவுட் திரையுலகை தாண்டி, உலகம் முழுவதுமே ரெசிண்டண்ட் ஈவில் சீரிஸ் படங்களுக்கு பெரிய ரசிகர்கள் இருக்க, இன்று வெளிவந்துள்ள ஜாக் கிரிகேர் இயக்கத்தில் இந்த ரெசிடண்ட் ஈவில் எப்படியுள்ளது? பார்ப்போம்.

கதைக்களம்

நாயகன் ப்ரேயான் ஒரு மெடிக்கல் கொரியர் பாய் ஆக வேலை பார்த்து வருகிறார். அதாவாது முக்கியமான ஆர்கான் இன்னொருத்துருக்கு தேவைப்படும் போது அதை தேவைப்படும் மருத்துவ மனையில் கொடுப்பது.

அப்படி அவர் கையில் ஒரு ஆர்கான் கொடுத்து ஒரு இடத்திற்கு போக சொல்ல, அங்கு செல்லும் வழியில் ஒருவரை காரில் இடித்துவிடுகிறார். அதை தொடர்ந்து அவரை காரில் வைத்துகொண்டு மருத்துவமனை செல்ல பல அசம்பாவிதம் நடக்க, ப்ரேயான், அங்கிருந்து ஒரு வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு பல விசித்திரமான மனிதர்கள், விலங்குகள் என பார்க்க அவர்கள் ப்ரேயானை தாக்க வர, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

Resident Evil திரை விமர்சனம் | Resident Evil 2026 Movie Review

படத்தை பற்றிய அலசல்

ப்ரேயான் ஆக ஆஸ்டில் படம் முழுவதும் உயிரை கையில் பிடித்துகொண்டே ஓடுகிறார். அதிலும் அத்தனை பதட்டத்திலும் படம் முழுவதும் காமெடி கவுண்டர் கொடுத்து கொண்டே இருக்கிறார்.

ரெசிடண்ட் ஈவில் என்றாலே திரில்லர், பதட்டம் என்று தான் இருக்கும், ஆனால் இதில் இயக்குனர் கூடவே காமெடியும் சேர்த்தது சர்ப்ரைஸ் தான், அது ஓரளவிற்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதே நேரத்தில் ரெசிடண்ட் ஈவில் படத்திற்கான தன்மையையும் இது பாதிக்கிறது.

ஆரம்பத்தில் இருந்த திரில் நமக்கு விஷயம் தெரிந்தவுடன் பிறகு என்ன ஜாம்பிகளை வேட்டையாடும் அதிரடியாகவே நகர்கிறது. ஆனால், பழைய ரெசிடண்ட் ஈவில் சீரிஸில் பார்த்த பிரமாண்ட அதிரடி காட்சிகள் இல்லை, இதில் கொஞ்சம் ராவ் ஆகவே காட்சிகளை எடுத்துள்ளனர்.

அதிலும் ஒரு சிறுமி காலில் வைரஸ் பாதிக்கப்பட்டது, அதை ஹீரோ காப்பாற்ற போகும் காட்சி எல்லாம் செம பதட்டமாக இருக்க வேண்டும், ஆனால் அதையும் காமெடியாக ட்ரீட் செய்தது இந்த படத்தை நாம் எப்படி எடுத்துகொள்வது என்ற எண்ணத்தை தான் தருகிறது.

கிளைமேக்ஸ் அந்த மாற்று மருந்தை நாயகன் எடுத்து வரும் காட்சி, அதுவும் அந்த 28 மாடி பில்டிங்கில் மாற்று மருந்து எடுத்து வரும் போது வரும் ஆபத்துக்கள் அதிலிருந்து நாயகன் மீண்டு வரும் காட்சிகள் எல்லாம் செம சுவாரஸியம்.

டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு, படம் முழுவதும் இரவு காட்சியை அத்தனை துல்லியமாக எடுத்துள்ளனர், இசை திரில்லர் படத்திற்கான பயத்தை தூண்டுகிறது.

க்ளாப்ஸ்

திரில்லங் காட்சிகள்

இரண்டாம் பாதியில் அந்த பில்டிங்கில் வரும் காட்சிகள்.

பல்ப்ஸ்

சீரியஸான இடங்களில் காமெடி வைத்தது கொஞ்சம் கதையிலிருந்து அந்நியப்படுத்துகிறது.

கிளைமேக்ஸ்

பாடி ஹாரர் காட்சிகள் ஏராளம்.

மொத்தத்தில் ரெசிடண்ட் ஈவில் சுவாரஸ்யமான களம் இருந்தும் பார்த்து பழகி போன காட்சிகளால் ஒன் டைம் வாட்ச் ஆக அமைகிறது.  

Rating: 2.5/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US