Resul Pookutty: ஆர்ஆர்ஆர் படத்தை மோசமாக பேசிய ரசூல் பூக்குட்டி! விளாசும் நெட்டிசன்கள்

By Parthiban.A Jul 04, 2022 12:40 PM GMT
Report

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் கடந்த மார்ச் 24ம் தேதி ரிலீஸ் ஆனது. தியேட்டர் வசூலில் சாதனை படைத்த இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் பிரபலங்களும் கூட பலரும் இந்த படத்தை பார்த்து வியந்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் RRR படத்தை விமர்சித்து இருக்கிறார்.

Resul Pookutty: ஆர்ஆர்ஆர் படத்தை மோசமாக பேசிய ரசூல் பூக்குட்டி! விளாசும் நெட்டிசன்கள் | Resul Pookutty Slammed For Calling Rrr A Gay Movie

ஆர்ஆர்ஆர் Gay படம் என அவர் விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆலியா பட்டை செட் prop ஆக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்து இருக்கிறார்.

Resul Pookutty: ஆர்ஆர்ஆர் படத்தை மோசமாக பேசிய ரசூல் பூக்குட்டி! விளாசும் நெட்டிசன்கள் | Resul Pookutty Slammed For Calling Rrr A Gay Movie

நெட்டிசன்கள் ரசூல் பூக்குட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீதான மரியாதை ஒரே ட்விட்டில் போய்விட்டது என பலரும் ட்விட் செய்ய, தனது ட்விட்டுக்கு அவர் விளக்கம் கூறி இருக்கிறார்.

"மேற்கத்திய நாடுகளில் அப்படி சொல்கிறார்கள்.. நான் அதை குறிப்பிட மட்டுமே செய்தேன்" என ரசூல் பூக்குட்டி விளக்கம் தெரிவித்து இருக்கிறார். 

Resul Pookutty: ஆர்ஆர்ஆர் படத்தை மோசமாக பேசிய ரசூல் பூக்குட்டி! விளாசும் நெட்டிசன்கள் | Resul Pookutty Slammed For Calling Rrr A Gay Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US