ரெட்ரோ படம் 15 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
ரெட்ரோ
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை Stone Bench Films மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டது.
வசூல்
இந்த நிலையில் 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ. 101 கோடி வசூல் செய்துள்ளது.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
