இலங்கையில் ரெட்ரோ படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ரெட்ரோ
சூர்யாவின் படம் என்றாலே கண்டிப்பாக உலகளவில் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு இருக்கும். அதுவும் கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான படம் என்றால் சொல்லவே தேவையில்லை.
அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம்தான் ரெட்ரோ. கங்குவா படத்தின் படுதோல்வியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனாலும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 28 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.
இலங்கை வசூல்
இந்த நிலையில், இலங்கையில் முதல் நாள் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரெட்ரோ படம் முதல் நாள் இலங்கையில் மட்டுமே ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி ரூ. 61 லட்சம் வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
