10 நாட்களில் ரெட்ரோ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
ரெட்ரோ
சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

Stone Bench Films மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்து இருந்தனர். பூஜா ஹெக்டே இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், முதல் நான்கு நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. ஆனால், அதன்பின் வசூலிலும் எதிர்பார்த்த வரவேற்பு இப்படத்திற்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 10 நாட்களை கடந்திருக்கும் ரெட்ரோ படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 93 கோடி வசூல் செய்துள்ளது.
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri