12 நாட்களில் ரெட்ரோ படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ரெட்ரோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ரெட்ரோ.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க Stone Bench Films மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். திரையில் இவர்கள் இருவருடைய காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 96 கோடி வசூல் செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் தான் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan