5 நாட்களில் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ரெட்ரோ
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவான திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை Stone Bench Films மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
வசூல்
இந்த நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் காத்திருக்கும் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளது.