சூர்யா பல வருடங்களாக ஒரு தியேட்டர் ஹிட்-க்கு போராடி வருகிறார், இந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்ற நம்பிக்கை இயக்குனருடன் கைக்கோர்க்க, ரெட்ரோ அந்த நம்பிக்கையை காப்பாற்றி சூர்யாக்கு கம்பேக் கொடுத்ததா, பார்ப்போம்.
கதைக்களம்
சூர்யா முதல் காட்சியிலேயே தன் அப்பாவை பறிகொடுத்து, நிற்க, அவரை தத்தெடுத்து வளர்க்கிறார் ஜோஜு ஜார்ஜ் மனைவி. இந்த விபத்திற்கு பிறகு சூர்யா சிரிப்பு, சந்தோஷம் என்பதை மறக்கிறார்.
என்ன தான் ஜோஜு ஜார்ஜை-யை சூர்யா அப்பாவாக பார்த்தாலும், அவரோ ஒரு அடியாளாக தான் பார்க்கிறார். அவரை வைத்து பல நாச வேலைகளை பார்க்கிறார். அதே நேரத்தில் சூர்யாவுக்கு பூஜா மீது காதல் வர, அடிதடி எல்லாத்தையும் விட்டு, திருமண வாழ்க்கையில் நுழைய முயல்கிறார்.
ஆனால், அப்பா தனக்கு கொடுத்த கடைசி வேலை ஒன்றை சூர்யா செய்யாமல், அதை மறைத்து வைக்கிறார். இதனால் கோபமான ஜோஜு ஜார்ஜ், பூஜாவை கொன்றால் தான் நீ அதை சொல்வாய் என கொல்ல வர, ஜோஜு ஜார்ஜ் கையை சூர்யா வெட்டுகிறார்,.
இதனால் பூஜா கோபத்துடன் அந்தமான் செல்ல, சூர்யா சிறை செல்கிறார். பிறகு தன் காதலி இருக்குமிடம் தெரிந்து சூர்யா அங்கு செல்ல, அதே நேரத்தில் ஜோஜு ஜார்ஜ் குரூப் மற்றும் சிலர் சூர்யாவை துரத்தி வர, பிறகு என்ன ஆனது யுத்தத்தில் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகர் என்பதாலேயே தளபதி படத்தில் இன்ஸ்பியர் ஆகியிருப்பார் போல, இவர் கிருஷ்ணர் கதை ஒன்றை இந்த காலக்கட்டத்திற்கு ஏற்றது போல் எடுத்துள்ளார்.
படத்தில் நிறைய மெட்டபெர் குவிந்துள்ளது, வேல் அச்சுடன் பிறக்கும் சூர்யா, அடிதடி சண்டை என இரத்த வெள்ளத்தில் மூழ்க, அந்த வெள்ளத்தின் அனையாக பூஜாவின் காதல் கிடைக்கிறது. அந்த காதல் அவரை எங்கு கொண்டு செல்கிறது என்பதை லவ், நகைப்பு, யுத்தம், கல்ட், தி ஒன், தம்மம் என்ற 6 பாகமாக காட்டியுள்ளனர்.
சூர்யா கண்டிப்பாக ஒரு நடிகராக செம கம்பேக் தான், அதிலும் படத்தில் ஆடம்பத்தில் திருமண மண்டபத்தில் வரும் அந்த சிங்கிள் ஷாட் சீன்-க்கே கொடுத்த காசு தகும் என்பது போல் மிரட்டியுள்ளது படக்குழு உழைப்பு.
பூஜா அத்தனை அழகு, வெறும் அழகு மட்டுமில்லாமல் இதில் கொஞ்சம் நடிக்கவும் செய்துள்ளார், சூர்யா-பூஜா ஜோடி படம் முழுவதுமே செம ட்ரீட் தான் ரசிகர்களுக்கு, அதே நேரத்தில் லோலிட்டா பாடலை பின்னாடி ஓடவிட்டு வரும் மாண்டேஜ் காட்சிகள் ரசனை தான்.
படம் அந்தமான் சென்று மக்களை மீட்க கடவுள் வருவார் என்ற நிலையில், அந்த கடவுளாக சூர்யா வருவது, அரசன் எனப்படும் அரக்கர்களை அவர் கொல்லபோவது அதை கதையாக கனேக்ட் செய்த விதம் என அத்தனையும் நன்று தான்.
ஆனால், அந்த போரட்டத்தில் சுவாரஸியம் இருந்ததா என்றால் கொஞ்சம் கேள்விக்குறி தான். சிரிக்கவே சிரிக்காத சூர்யா இடைவேளையில் சிரிக்கும் போது, நிமிர்ந்து உட்கார வைத்து, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே மட்டும் நிமிர வைக்கிறது.
ஒரு கட்டத்தில் அட இது என்ன ஆயிரத்தில் ஒருவன் மாதிரியே இருக்கே என தோன்றுவது தடுக்க முடியவில்லை, சூர்யா-பூஜா தாண்டி ஜோஜு ஜார்ஜ் நடிப்பு அருமை, அன்பு மனவே டாடி இஸ் கமிங்டா என அவர் பேசும் நடிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
மேலும், நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற பிரபல நடிகர்கள் எல்லாம் எதோ வந்து செல்கின்றன என்பது போல் தான் உள்ளது, ஜெய்ராம் சிரிப்பு டாக்டராக கொஞ்சம் ஸ்கோர் செய்கிறார், கருணாகரன் எல்லாம் எதோ கார்த்திக் சுப்புராஜ் கம்பெனி ஆர்டிஸ்ட் என்பதால் ப்ரேமில் வெறுமென நிற்க வைத்துள்ளனர்.
படம் காதல், சண்டை, யுத்தம் இதை நோக்கியே சென்றிருந்தால் கூட சுவார்ஸ்யம் இருந்திருக்கும் போல என்று தோன்றுகிறது, டெக்னிக்கலால படம் மிக வலுவாக உள்ளது, ஒளிப்பதிவு அந்தமான் அதோட அந்த சண்டைக்களம் என காட்டிய விதம் சூப்பர், படத்தின் மற்றொரு ஹீரோ சந்தோஷ் நாராயணன் மிரட்டி எடுத்துள்ளார் பின்னணியில்.
க்ளாப்ஸ்
சூர்யா நடிப்பு, ஒட்டு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார்.
பூஜா-சூர்யா காதல் காட்சிகள்.
சிங்கிள் ஷாட் சீன், முதல் பாதி.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி, இன்னமும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் ரெட்ரோ ஒரு நடிகராக சூர்யாவிற்கு கம்பேக் என்றாலும், ஒரு முழுப்படமாக சூர்யா-கார்த்திக் சுப்புராஜுக்கு கொஞ்சம் தடுமாற்றம் தான்.