இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!
பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார்கள், ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளருக்கு மட்டுமே மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஹீரோவுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே பல தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் பாலிவுட்டில் நடிகர்கள் பலரும் profit ஷேரிங் முறையில் தான் படங்கள் நடித்து வருகிறார்கள். தெலுங்கு ஹீரோக்களும் முறையை படிப்படியாக பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது.

இனிமே share தான்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 'பெரிய பட்ஜெட் படங்கள் இனி Revenue share முறையில் மட்டுமே தயாரிக்கபடும்' என தெரிவித்து உள்ளனர்.
அதற்கு நடிகர் சங்கம் ஒத்துழைக்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர். அதற்கு அடையாளமாக மே 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri