ரிவால்வர் ரீட்டா படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ரிவால்வர் ரீட்டா
ஜே. கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 28ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ரிவால்வர் ரீட்டா.

இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தது.

வசூல்
இந்த நிலையில், 7 நாட்களில் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இப்படம் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளது. இது கிட்டத்தட்ட இப்படத்தின் இறுதி வசூலாகும்.
