கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய அப்டேட்!! இதோ..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ரிவால்வர் ரீட்டா'. இதில் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
அப்டேட்
சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரிவால்வர் ரீட்டா படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.