சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா?
சரிகமப சீசன் 5
ஜீ தமிழில் ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சரிகமப சீசன் 5.
இந்த 5வது சீசன் சில வாரங்களுக்கு முன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கம் போல் அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
மொத்தம் 28 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த ஷோ இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாபெரும் பரிசு
எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5வது சீசன் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ. 10 லட்சமும், இரண்டாவது ரன்னர் அப் போட்டியாளருக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கள் வழங்கப்பட உள்ளதாம்.
அதோடு மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ₹5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட உள்ளதாம்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
