2 நாள் முடிவில் ரிச்சார்ட் நடித்த திரௌபதி 2 படம் இதுவரை செய்துள்ள வசூல்...
திரௌபதி 2
ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி இருந்த திரைப்படம் திரௌபதி 2.
படம் கடந்த ஜனவரி 23ம் தேதி ரிலீஸ் ஆனது. 14ம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியையும், தற்கால அரசியலையும் இணைத்து இப்படம் பேசியுள்ளது. இப்படம் ரிலிஸ் ஆன அன்றே அஜித்தின் மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் ஆனது.
இதனால் அதிக மக்கள் உட்கார்ந்து பார்க்கும் பெரிய திரையரங்குகளில் அதிகம் மங்காத்தா தான் ஒளிபரப்பாகிறது என்று மோகன் ஜியே வீடியோ வெளியிட்டிருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ்
கடந்த முறை திரௌபதி முதல் பாகம் கொடுத்த மிகப்பெரிய வசூல் வெற்றியால் 2ம் பாகத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்தார்கள்.
மற்ற பெரிய படங்களின் போட்டி மற்றும் ரீ-ரிலீஸ் படங்களின் ஆதிக்கம் இருந்தபோதிலும் படம் நல்ல வசூலை தான் ஈட்டி வருகிறது. தற்போது இப்படம் 3 நாளில் ரூ. 2 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.