தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் இவர் தானா.. யார் தெரியுமா
பணக்கார நடிகர்கள்
இந்திய சினிமாவில் பணக்கார நடிகர் ஷாருக்கான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே 770 மில்லியன் டாலர்கள் என்கின்றனர்.
ஆனால், தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா, அது யார் என்று பார்க்கலாம் வாங்க.
தென்னிந்திய பணக்கார நடிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகர் என்றால் அது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தான். இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே 200 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.
இவருக்கு அடுத்த இடத்தில் அவருடைய மகனும், நடிகருமான ராம் சரண் தான் இருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 175 மில்லியன் டாலர் இருக்கு என்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 123 மில்லியன் டாலர்கள் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் நடிகர் நாகார்ஜுனா.
இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து இடங்களில் ஜூனியர் என்டிஆர் 60 மில்லியன் டாலர்கள், விஜய் 56 மில்லியன் டாலர்கள் மற்றும் ரஜினிகாந்த் 55 மில்லியன் டாலர்கள் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.