சூப்பராக நடந்த நடிகர் ரியோ ராஜின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்- கலக்கல் புகைப்படங்கள்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கி ரசிகைகளை அதிகம் பெற்றவர் ரியோ ராஜ். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு தான் கிடைத்து வந்தன.
அதில் பணிபுரிந்து கொண்டிருந்த போது விஜய் டிவிக்கு மாறினார். இங்கு முதலில் சரவணன்-மீனாட்சி தொடரில் நடித்தார்.
ரியோ திரைப்பயணம்
சீரியலில் நடித்துவந்த ரியோ சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணணும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து என்ன படம் நடிக்கப்போகிறார், யாருடன் கூட்டணி அமைக்கிறார் என்பது தெரியவில்லை.

ரியோ திருமணம், குடும்பம்
சன் மியூசிக்கில் பணிபுரிந்த போது ரியோ ஸ்ருதி என்பவரை காதலித்து வந்துள்ளார், அவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு ரிதி என்ற அழகிய மகள் உள்ளார்.

அண்மையில் அவருக்கு 2வது பிறந்தநாள் வர வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தனது மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா..! வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்