நடிகர் ரியோவின் மகளா இது..! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
ரியோ ராஜ்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் ரியோ ராஜ். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் முன்னணி நடிகராகவும் உயர்ந்தார்.
இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் களமிறங்கினார். நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த ரியோ சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அடுத்ததாக ஜோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
ரியோவின் மகள்
நடிகர் ரியோ கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ரிதி எனும் அழகிய பெண் குழந்தை உள்ளார்.
இந்நிலையில், தீபாவளி வாழ்த்துக்கள் கூறி தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ரியோ மகளா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..