பிக் பாஸ் ரியோ ராஜ் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. என்ன தெரியுமா
Positive Print ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் பிளான் பண்ணி பண்ணனும்.
இப்படத்தை பானா காத்தாடி படத்தின் இயக்குனர், பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.