மகாபாரதம் சகுனி மாமாவாக நடித்தவர் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
மகாபாரத தொடரில் சகுனி மாமா ரோலில் நடித்து அசத்திய நடிகர் குபி பைன்தல் இன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்து இருக்கிறார்.
79 வயதாகும் அவர் மும்பையின் அந்தேரி பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இறுதி சடங்கு
இன்று காலை 9 மணிக்கு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவரது உறவினர் தெரிவித்து இருக்கிறார். பழம்பெறும் நடிகரின் மரணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குபி பைன்தல் இறுதி சடங்குகள் இன்று மாலை நடந்து முடிந்திருக்கிறது. அவருக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தி விடை கொடுத்து இருக்கின்றனர்.
விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குக் வித் கோமாளி புகழ்! என்ன நடந்தது?

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
