காந்தாரா பார்க்க வரும் முன் அதை செய்ய கூடாதா.. வைரல் போஸ்டர் உண்மையா என ரிஷப் ஷெட்டி விளக்கம்
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: Chapter 1 படம் வரும் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
சமீபத்தில் ரிலீஸ் ஆன அதன் ட்ரெய்லருக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
பரவும் தகவல் உண்மையா?
இந்நிலையில் Kantara: Chapter 1 படத்தை தியேட்டர்களில் பார்க்க வரும் முன் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என ஒரு போஸ்டர் இணையத்தில் உலா வருகிறது.
"குடிக்க கூடாது, புகை பிடிக்க கூடாது, அசைவம் சாப்பிட கூடாது" என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நெட்டிசன்கள் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்தனர்.
ஆனால் அது படக்குழு வெளியிட்ட போஸ்டரே இல்லையாம். அது போலியான ஒன்று என ரிஷப் ஷெட்டி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
"அதை பார்க்கும்போது நானே அதிர்ச்சி ஆகிவிட்டேன். தயாரிப்பு டீம் உடன் கூட அதை பற்றி விசாரித்தேன். அதை நாங்கள் செய்யவே இல்லை" என ரிஷப் ஷெட்டி கூறி இருக்கிறார்.