காந்தாரா 2 படத்திற்காக நடிகர் ரிஷப் ஷெட்டியின் சம்பளம் இவ்வளவா?- எத்தனை கோடி பாருங்க
காந்தாரா
KGF, காந்தாரா போன்ற படங்கள் மூலம் கன்னட சினிமா இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது.
கேஜிஎப் தொடர்ந்து இப்போது காந்தாரா 2வது பாகம் முதல் பாகத்தின் பெரிய வெற்றியால் உருவாகி வருகிறது.
1800களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார், ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கன்னடத்தில் தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
2வது பாகம்
காந்தாரா சேப்டர் 1 என்ற பெயரில் அடுத்த பாகம் மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைத்து அதிக செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த 2வது பாகத்திலும் நாயகனாக ரிஷப் ஷெட்டியே இயக்கி நடிப்பதால் அவருக்கு தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் ரூ. 100 கோடியை சம்பளமாக வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
