பிரியா பவானி ராசி இல்லா நடிகையா?.. பிரபல நடிகர் கொடுத்த பதில்
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 கடந்த 12 -ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இப்படத்தில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பதிலடி
சமீபத்தில் நடிகர் ரிஷிகாந்த் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பிரியா பவானி ஷங்கரை ராசி இல்லா நடிகை என்று சிலர் சமூக வலைத்தளங்களில் சொல்கின்றனர். இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், இது என்ன என்றே எனக்கு புரியவில்லை. பிரியா பவானி ஒரு சிறந்த நடிகை. அவர் ரொம்ப அன்பாக நடந்துகொள்வர். இது போன்ற கமெண்ட்களை கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தினால் போது என்று ரிஷிகாந்த் கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
