ரிஷிபீடியா
Youtuberகளின் நெட் ஒர்த் மற்றும் அவர்களுடன் லைஃப் ஸ்டைல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ரசிகர்களின் Favorite Youtuber-ஆன ரிஷிபீடியா குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
Youtube-ல் மிகவும் பிரபலமான சேனல்களில் ஒன்று ரிஷிபீடியா. இதனை லோகேஷ் ரிஷி குமார் என்பவர் நடத்தி வருகிறார். பல்வேறு மர்மமான சம்பவங்கள், குற்றங்கள், வரலாற்று நிகழ்வுகள் பற்றிய தகவல்களை ரிஷிபீடியா வழங்குகிறது.
இது போன்ற தகவல்களை வழங்குவதன் மூலம், பார்வையாளர்கள் பல்வேறு தலைப்புகளில் அறிவை பெறுவதற்கும், சுவாரசியமான தகவல்கள், வரலாறுகள், புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்து தெரிந்து கொள்வதற்கும் ஒரு தளமாக ரிஷிபீடியா Youtube சேனல் உள்ளது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரிஷிபீடியாவில் எந்த ஒரு புதிய வீடியோவும் அப்லோட் செய்யவில்லை. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை commitments காரணமாக ஓய்வு எடுத்துக்கொள்வதால், ரிஷிபீடியா புதிய வீடியோக்கள் பதிவேற்றவில்லை என கூறப்படுகிறது.
நெட் ஒர்த்
ரிஷிபீடியா youtube சேனல் 3.05 மில்லியன் subscribers கொண்டுள்ளது. மேலும் இதுவரை 204 வீடியோஸ் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 500K முதல் 1 மில்லியன் வரை ஒவ்வொரு வீடியோவும் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரிஷிபீடியாவின் நெட் ஒர்த் குறித்து தகவல் பார்க்கலாம் வாங்க. இந்த Youtube சேனலின் மொத்த நெட் ஒர்த் $ 116K - $ 694K இருக்கும் என கூறப்படுகிறது.