மூத்த முன்னணி பிரபலத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. யாருடன் இருக்கிறார் தெரியுமா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை கொண்டுள்ள சீரியலாக பாக்கியலட்சுமி விளங்கி வருகிறது.
பல திருப்புமுனை கொண்டு நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலை மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், இளம் நடிகை ரித்திகா.
இவர், ராஜா ராணி சீரியல் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
மேலும் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரித்திகா, தமிழ் திரையுலகில் மூத்த முன்னணி பிரபலமாக விளங்கி வரும் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
