ரஜினியின் தலைவர் 170 படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட காயம்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தலைவர் 170
TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170.
இப்படத்திற்கு இதுவரை தலைப்பிடவில்லை. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படத்தின் First லுக் வருகிற 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் ஷாக்கிங் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஷாக்கிங் புகைப்படங்கள்
தலைவர் 170 படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த சண்டை காட்சியில் ரித்திகா சிங் நடித்துள்ளார். அப்போது எதிர்பாராமல் அவருக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சண்டை காட்சியின் போது நடிகை ரித்திகா சிங்கிற்கு ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..



Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
